Sunday, December 16, 2007

ஜாதிய கொடுமைகளை இளைஞர்கள் ஓழிக்க வேண்டும் * தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் ஸ்டாலின் அழைப்பு

திருநெல்வேலியில் நடைபெறும் தி.மு.க.,வின் இளைஞரணி மாநாட்டில் தமிழகத்தில் ஜாதிய ‌கொடுமைகளை ஒழிக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்கள் கையில் உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நடைபெறும் தி.மு.க.,வின் இளைஞரணி மாநாட்டில் மத்திய அமைச்சர் ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், இரா.புகழேந்தி ஆகியோர் உரையாற்றினார். பின்னர் மாநாட்டில் தலைமையுரையாற்றிய இளைஞரணி செயலாளரும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான ஸ்டாலின் தமிழகத்தில் ஜாதிய ‌கொடுமைகளை ஒழிக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்கள் கையில் உள்ளதாக தெரிவித்த அவர் அண்ணாவின் நூற்றாண்டை கொண்டாடும் இந்த வேளையில் ஜாதிய கொடுமைகளை ஒடுக்க வேண்டிய பொறுப்பை இளைஞர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.மேலும் அவர் சிலர் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு கட்சி ஆரம்பிப்பதாக கூறினார்.

தி.மு.க., இளைஞரணி மாநாட்டில் பல முக்கிய 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 25வது தீர்மானத்‌தை முதல்வர் தெரிவிப்பார் என்று ஸ்டாலின் அறிவித்தார். சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற தொடங்கியது. ஆனால் பா.ஜ., சங்கபரிவார், அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் அறிவியலுக்கு மாறான காரணங்களை கூறி சுப்ரீம் கோர்ட்டில் திட்டத்திற்கு தடை வாங்கியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமும் கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தை விட தற்போதைய தி.மு.க., ஆட்சி காலத்தில் அதிக தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டதற்க்காக நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், கடந்த ஆட்சி காலத்தில் ‌வேலை தடையுத்தரவை நீக்கியதால் தற்போது இலட்சகணக்கான ‌இளைஞர்கள் ‌வேலைவாய்ப்பு பெற்றுள்ளதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும்,, மத்திய அரசின் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளீட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சியில் இளைஞர்களை சேர்ப்பதற்கு தி.மு.கவினர் முயற்சி செய்ய வேண்டும்: நெல்லையில் நடைபெறும் தி.மு.க.,வின் இ‌ளைஞரணி மாநாட்டின் இரண்டாவது நாளன்று மாநாட்டில் தமிழச்சி தங்கபாண்டியன் உரையாற்றினார். அவர் தனது உரையில் தி.மு.க.,தொண்டர்கள் விழிப்புடன் இருந்து இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும், திடிரென்று கட்சி ஆரம்பித்து பொய் வாக்குறுதிகளை தரும் தலைவர்களை இளைஞர்கள் நம்பாமல் புறக்கணிக்க செய்ய வேண்டும் இளைஞர்களை கட்சியில் சேர்ப்பதன் மூலம் தமிழகத்தின் நலன்க‌ளுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்று கூறினார்.

கச்சேரியுடன் இரண்டாவது நாள் தொடங்கியது: தி.மு.க.,வின் இளைஞரணி மாநாடு ‌இரண்டு நாள் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி இசை கச்சேரியுடன் தொடங்கியது.


Thanks to DINAMALAR
The original news was published by The Dinamalar - tamil newspaper.
http://www.dinamalar.com/2007dec16/specialnewsU.asp?newsid=1

Friday, December 14, 2007

Live Telecast of DMK Youth Wing Conference

Hi,

The live relay of the DMK Youth Wing Conference will start in a while.
If you want to go to the DMK Youth Wing Website the URL is:

http://www.dmkyouthwing.in/NellaiLive.html

Or you can see it directly here below.